உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் விழா வரும் 22ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் புறப்பட்டு நேற்று இரவு அங்கு தங்கினர்.