ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் போன்ற தனது சொந்த வணிகங்களின் தலைவர் மற்றும் நிறுவனர் என்ற முறையில் நீதா அம்பானி மிகவும் பிஸியாக இருக்கலாம். ஆனால், ஒரு தாயாக அவரது பங்கு எப்போதும் முதன்மையானது.
உண்மையில், நீதா அம்பானி தனது குழந்தைகளை வளர்ப்பதில் எந்த அலட்சியத்தையும் காட்டவில்லை. ஒரு தாயாக அவர் தனது பொறுப்புகளை முன்னணியில் வைத்திருக்கிறார். மற்றும் தனது குழந்தைகளை வளர்க்கும் போது சில விதிகளை பின்பற்றுகிறார். எனவே, இந்த கட்டுரையில், நீதா அம்பானியிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில பெற்றோருக்குரிய குறிப்புகள் இங்கே உள்ளன.
குழந்தைகளின் முழு வளர்ச்சிக்கு குழந்தை பருவத்திலிருந்து சில அடிப்படை நல்ல பழக்க வழக்கங்களை அவர்களுக்கு புகட்டுவது மிகவும் அவசியம். இதில் நேர மேலாண்மை முதல் உணவு வரை நிறைய விஷயங்கள் அடங்கும்.
நேர மேலாண்மை: நீதா அம்பானி எப்போதும் தன் குழந்தைகளை நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனவே, அவர் ஆரம்பத்தில் இருந்தே தன் குழந்தைகளின் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார். நீதா அம்பானி எப்போதும் தனது குழந்தைகள் சரியான நேரத்தில் சாப்பிடுவதும், படிப்பதையும், விளையாடுவதையும், உறுதி செய்கிறார். சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு நேர மேலாண்மை பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்.
பணத்தின் முக்கியத்துவம்: உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக இருந்து வந்தாலும் நீதா அம்பானி தனது குழந்தைகளுக்கு பணத்தின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுத்துள்ளார். கொஞ்சம் பாக்கெட் மணியுடன் தனது பிள்ளைகளுக்கு பணத்தின் மதிப்பை கற்றுக் கொடுத்துள்ளார். நீங்களும் இதை செய்தால், உங்கள் குழந்தைகள் குறைந்த பணத்தில் கூட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கற்றுக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: Parenting Tips : மசாஜ் செய்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதா..?
நேரம் ஒதுக்குங்கள்: குழந்தைகள் சொல்வதை விட பார்த்து தான் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள் என்று நீதா அம்பானி நம்புகிறார். எனவே, எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது தான் ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை. இதையே நீதா அம்பானியின் பின்பற்றுகிறார். இனி நீங்களும் பின்பற்றுங்கள்.
குழந்தைகளின் செயல்பாடுகளில் எச்சரிக்கை: நீதா அம்பானி தனது வாழ்க்கை மற்றும் வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவர் தனது குழந்தைகளை பற்றி அறிந்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே தன் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கண்காணித்து வருகிறார். ஏனெனில், குழந்தை பருவத்தில் குழந்தைகளுக்கு அவர்களின் நல்லது கெட்டது தெரியாது. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அறியாமல் தவறான நபர்களுடனும், விஷயங்களிடனும் தொடர்பு கொள்கிறார்கள். எனவே ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தையின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்.
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல்: நேரம், நேர மேலாண்மை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, முதல் பணத்தின் முக்கியத்துவம் மற்றும் அவர்களுக்கு தரமான நேரத்தை வழங்குவது வரை என நீதா அம்பானி தனது குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களின் ஒவ்வொரு அடிப்படை தேவைகளையும் கவனித்து அதை பூர்த்தியும் செய்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D