இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகே அமர்ந்து வெங்கடேசன் தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் மது அருந்தி உள்ளார். இதனை தட்டிக்கேட்ட செந்தில் குமாரை மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். சத்தம் கேட்டு செந்தில்குமாரின் வீட்டின் அருகே இருந்த அவரது தம்பி மோகன் மற்றும் செந்தில்குமாரின் சித்தி ரத்தினம்மாள் மற்றும் மோகனின் தாய் புஷ்பவதி ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டி சாய்ந்தது. இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது.