வாகனத்தில் எரிபொருள் நிரப்பும் முன், ஜீரோவை சரி பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அதாவது ஜீரோவில் மீட்டர் இருந்தும் நமக்கு குறைவான அளவில் எரிபொருள் நிரப்பப்படுகிறது என்கின்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால், விநியோக இயந்திரத்தின் சரிபார்ப்பு சான்றுகளை காட்டுமாறு நீங்கள் அந்த நிறுவனத்திடம் கேட்கலாம்.