ஆசிரியை தீபிகாவை இதற்காகத்தான் கொன்று புதைத்தேன்.. இளைஞர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

Published : Jan 25, 2024, 10:55 AM IST

பள்ளிக்குச் சென்ற ஆசிரியை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நித்தேஷ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். 

PREV
14
ஆசிரியை தீபிகாவை இதற்காகத்தான் கொன்று புதைத்தேன்.. இளைஞர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!
Mandya teacher Deepika

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா(28). இவர் மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ரீல்ஸ் செய்வதிலும் பிரபலமானவராக இருந்து வந்தார். இவரது கணவர் லோகேஷ். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல கடந்த 20ம் தேதி வேலைக்கு சென்ற தீபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

24
Mandya teacher Deepika murder

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே காணாமல் போன தீபிகாவின் வாகனம் மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ள மலையடிவாரத்தில் நிற்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே எரிந்த நிலையில் சடலம் ஒன்றை கைப்பற்றினர். இறுதியில் அது மாயமான ஆசிரியை தீபிகாவின் சடலம் என்பது உறுதியானது. அவரை கொடூரமாக கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு உடலை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. 

34
Melukote Hill

தீபிகாவுடன் கடந்த 2 ஆண்டுகளாக பழகிய நித்தேஷ் கவுடா(22) என்ற இளைஞர் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தீபிகாவின் ரீல்ஸ் தயாரிப்பு பணியில்  நித்தேஷ் கவுடா(22) ஈடுபட்டு வந்தார். இதனால் தீபிகாவுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இவருக்கு போக்கு சரியில்லாததால் இவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். 

44
Police Arrest

இந்நிலையில், தனது பிறந்த நாளைக் கொண்டாட தீபிகாவை, மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோயிலுக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற தீபிகாவுக்கும் நித்தேஷ் கவுடாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நித்தேஷ் தீபிகாவின் சுடிதார் சால் மூலம் அவரை கழுத்தை நெரித்து  கொலை செய்து  உடலை எரித்து மலையடிவாரத்தில் புதைத்தது தெரியவந்தது. மேலும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் பிறகே தெரியவரும். 

Read more Photos on
click me!

Recommended Stories