பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே மோதலும் காதலும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. முதல் சீசனில் தொடங்கி தற்போது நடைபெற்று வரும் 7-வது சீசன் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு காதல் ஜோடி பிக்பாஸ் மூலம் சேர்ந்துவிடுவார்கள். அந்த வகையில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட காதல் ஜோடி என்றால் அது கவின் - லாஸ்லியா ஜோடி தான். இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.
24
Losliya, Kavin
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது உருகி உருகி காதலித்த இந்த ஜோடி, பின்னர் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். லாஸ்லியா உடனான காதல் முறிவுக்கு பின்னர் மோனிகா டேவிட் என்பவரை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமும் செய்துகொண்டார் கவின். கவினின் திருமணத்தால் லாஸ்லியா மனமுடைந்து போனதாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் கவின் திருமணம் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார் லாஸ்லியா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அதில் அவர் கூறுகையில், கவின் திருமணம் செய்துகொண்டதை அறிந்து சந்தோஷப்பட்டேன். கெரியரிலும் நல்லா பண்ணிட்டு இருக்காங்க. அவருடன் பெர்சனல் வாழ்க்கையும் சூப்பராக போய்க் கொண்டு இருக்கிறது. அதனால் அவருக்காக நான் மிகவும் சந்தோஷப்படுறேன் என தன் முன்னாள் காதலன் கவின் குறித்து லாஸ்லியா பேசி உள்ளார். அதேபோல் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, நிச்சயம் காதல் திருமணம் தான் செய்துகொள்வேன் என உறுதியாக கூறினார்.
44
Losliya about her father
தொடர்ந்து பேசிய அவர், தன் தந்தையின் மறைவால் தான் மிகவும் உடைஞ்சு போனதாக கூறி இருக்கிறார். இதுபற்றி எமோஷனலாக பேசிய அவர், என் தந்தை இறந்து 3 வருடங்கள் ஆகப்போகிறது. இருந்தாலும், அவரை ரொம்ப மிஸ் பண்றேன். அவருக்கு பிக்பாஸ் பத்தி எதுவுமே தெரியாது. நான் அந்த ஷோவுக்கு போகிறேன் என்று சொன்னபோது ஆங்கரிங் பண்ண போரியானு கேட்டாரு. பிக்பாஸ் முடிஞ்சு வெளிய வந்தப்போ அவருக்கு வருத்தம் இருந்தது. பின்னர் மீடியா பற்றி தெரிஞ்சதும் எனக்கு சப்போர்ட் பண்ணினார்” என கூறினார்.