இதில் தளபதி படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் மணிரத்னம் செம்ம பார்மில் இருந்த சமயத்தில் ரஜினி உடன் அவர் கூட்டணி அமைத்த முதல் படம் தளபதி தான். அதுமட்டுமின்றி அப்படத்திற்கு இளையராஜா இசை என்பதால் அதுவும் ஒரு தனிச்சிறப்பாக அமைந்தது. அதோடு ரஜினியுடன் மலையாள நடிகர் மம்முட்டியும் நடித்திருந்ததால் கேரளாவிலும் இப்படத்திற்கு மவுசு இருந்தது.
ரஜினி என்றாலே அவரது ஸ்டைல் தான் அனைவரையும் கவர்ந்தது என்பதை புரிந்துகொண்டு, தளபதி படத்தில் சூப்பர்ஸ்டாருக்கென தனி ஸ்டைலை கொடுத்து அசத்தினார் மணிரத்னம். அதுமட்டுமின்றி தளபதி படத்தின் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்படுவதற்கு இளையராஜாவின் கைவண்ணம் தான் காரணம். அதில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடல் முதல் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் வைரை ஒவ்வொன்று ஒரு ரகம். இப்படி திறமையாளர்களின் சங்கமமாக அமைந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வெற்றி கண்டது.