படக்குனு துரையம்மாவாக மாறிய நடிகை அனிகா.. கொஞ்சும் கவர்ச்சியில் மயங்கும் ரசிகர்கள் - வைரல் போட்டோஷூட்!
Ansgar R |
Published : Oct 27, 2023, 08:31 PM IST
Anikha Surendran : கேரளாவில் பிறந்து மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து, அதன் பிறகு தற்பொழுது நாயகியாக உருமாறி உள்ள நடிகை தான் அனிகா சுரேந்திரன்.
கேரளாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்த அனிகா சுரேந்திரன் தனது மூன்று வயது முதல் நடித்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தல அஜித் அவர்களுடைய "என்னை அறிந்தால்" திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம்.
அதன் பிறகு தமிழில் மக்கள் செல்வனின் நானும் ரவுடிதான் மற்றும் மாமனிதன், ஜெயம் ரவியின் மிருதன், தல அஜித்தின் விசுவாசம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அனிகா, இருமுறை தல அஜித் அவர்களுக்கு மகளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
34
Anikha
தற்பொழுது ஓரிரு படங்களில் நாயகியாக நடித்து வரும் நடிகை அனிகா சுரேந்திரன், தற்போது தமிழில் உருவாகி வரும் தனுஷ் அவர்களுடைய 50-வது திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மூன்று தமிழ் திரைப்படங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
44
Kollywood Actress Anikha Photoshoot
மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் அனிகா அவ்வப்போது குறும்படங்களிலும், இணைய தொடர்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 ஆம் ஆண்டு "5 சுந்தரிகள்" என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக, கேரள அரசின் மாநில விருதை பெற்ற நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.