நாயகன் மீண்டும் வரார்... மறுவெளியீட்டுக்கு தயாரான கமல்ஹாசனின் கிளாசிக் ஹிட் படம்! எப்போ ரிலீஸ் தெரியுமா?

First Published | Oct 22, 2023, 2:22 PM IST

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் திரையரங்கில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

nayagan movie

தமிழ் சினிமாவில் வெளியான மாஸ்டர் பீஸ் படங்களின் பட்டியலை எடுத்து பார்த்தால் அதில் நாயகன் படம் நிச்சயம் இடம்பெற்று இருக்கும். 1987-ம் ஆண்டு திரைக்கு வந்த நாயகன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். கமல்ஹாசன் இப்படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நாசர், சரண்யா பொன்வண்ணன், டெல்லி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வெற்றி கண்டது.

kamal, saranya

இப்படத்தை பார்த்து சினிமாவுக்குள் வந்த பிரபலங்கள் ஏராளம். குறிப்பாக இன்றைக்கு கோலிவுட்டின் டாப் இயக்குனர்களாக இருக்கும் நெல்சன், லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என பலருக்கும் அப்படம் தான் ஒரு தாங்கள் சினிமாவுக்குள் வர ஊந்துகோளாக இருந்தது என பல பேட்டிகளில் கூறி இருக்கின்றனர். அந்த அளவுக்கு ஒரு மாஸ்டர் பீஸ் படமாகவே நாயகன் திகழ்ந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Nayagan kamalhaasan

இந்த நிலையில், தற்போது 36 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தை தொழில்நுட்ப ரீதியாக மெருகேற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வருகிற நவம்பர் 7-ந் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு நவம்பர் 3-ந் தேதி நாயகன் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படம் சுமார் 180க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

nayagan re release

கடைசியாக கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது திரையரங்குகளில் அப்படம் மூன்று வாரங்களுக்கு மேல் வெற்றிநடைபோட்டு வசூலையும் வாரிக்குவித்தது. அதனால் தற்போது நாயகன் படமும் அவ்வாறு எதிர்பார்ப்பை பெறும் என்கிற முனைப்பில் ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இதுதவிர கமலின் ஆளவந்தான் படமும் ரீ-ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... காமெடிங்கிற பேர்ல கடுப்பேத்துறாரு... கமல் முன்னிலையில் ஹவுஸ்மேட்ஸிடம் கும்மாங்குத்து வாங்கிய கூல் சுரேஷ்

Latest Videos

click me!