குட்நியூஸ்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

Published : Oct 27, 2023, 08:43 AM IST

புகழ் பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
13
குட்நியூஸ்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை இன்று மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்து வருகின்றனர். 

23

இந்நிலையில், கோட்டை மாரியம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு  உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். 

33

அதேபோல் கும்பாபிஷேக விழாவையொட்டி, சேலம் பட்டைக்கோயிலில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரண்டாவது அக்ரஹாரம், டவுன் ரயில் நிலையம், திருவள்ளுவர் சிலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories