குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ஆம் வீடான தனம், குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. உங்களுடைய பிரச்சினைகள் அத்தனையும் தீரும் காலம் வந்து விட்டது. நிம்மதியும் சந்தோஷம் உங்கள் வாழ்க்கையில் நிறையப்போகிறது.