கும்பகோணத்தில் பிறந்து, சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி என்ற இடத்தில் தனது பள்ளி படிப்பை முடித்து, அதன் பிறகு பட்டம் பெற்ற ஒருவர் தான் சிந்து. இன்று யூடியூப் எனப்படும் டிஜிட்டல் துறையாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி, இவருடைய வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது.
ஆரம்ப காலகட்டத்தில் பிளாக் ஷீப் என்ற யூட்யூப் சேனலோடு இணைந்து பிராங்க் வீடியோக்களை செய்து வந்த சித்து, அதன் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்றால் அது மிகையல்ல. தொடர்ச்சியாக பிளாக் ஷீப் சேனலோடு பயணித்து வந்த அவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
34
VJ siddhu vlogs videos
விஜே சித்து Vlogs
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு பிளாக் ஷீப் நிறுவனத்திலிருந்து மணக்கசப்பு எதுவும் இன்றி பிரிந்து, தனியே வந்து சிந்து, VJ Siddhu Vlogs என்கின்ற ஒரு புது யூடியூப் சேனலை தொடங்கினார். இவரோடு இணைந்து ஹர்ஷத் என்கின்ற இளைஞரும் இணைந்து கொண்டார். இந்த இருவரும் செய்யும் சேஷ்டைகளும், ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்ளும் விஷயங்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது.
44
VJ siddhu vlogs net worth
உள்ளூர்களில் மட்டுமே Vlog கன்டென்ட் கொடுத்து வந்த இந்த டீம், இப்பொது வெளிநாடுகளும் சென்று Vlog செய்யும் அளவிற்கு வளர்த்துள்ளனர். இந்நிலையில் இந்த இளைஞர்களின் சேனல் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 மில்லியன் Followerகளை நெருங்கப்போகும் VJ Siddhu Vlogsன் நெட் ஒர்த் சுமார் 175K அமெரிக்க டாலர் முதல் 300K அமெரிக்க டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது.