ஷாக்கிங் நியூஸ்.. ஃபுல் மப்பில் கணவனை துடிதுடிக்க கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி.! நடந்தது என்ன?

Published : Apr 16, 2024, 07:25 AM ISTUpdated : Apr 16, 2024, 07:27 AM IST

குடிபோதையில் கணவரை கட்டையால் மனைவி துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
ஷாக்கிங் நியூஸ்.. ஃபுல் மப்பில் கணவனை துடிதுடிக்க கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி.! நடந்தது என்ன?
Crime News

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் மேற்கு ஆதிவாசி காலனி அட்டாடோ பகுதியைச் சேர்நதவர் ரத்னாகரன்(58). இவரது மனைவி சாந்தா. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். 

24
Husband Murder

அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி சாந்தா வீட்டில் இருந்த கட்டையை எடுத்து கணவர் என்று கூடபாராமல் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த  ரத்னாகரன் மயங்கி கீழே விழுந்தார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

34
Police investigation

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்னாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44
Wife Arrest

 இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி சாந்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியோதையில் இருந்த மனைவி கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!

Recommended Stories