நடத்தையில் தீராத சந்தேகம்.. எந்நேரமும் ஓயாத சண்டை.. ஆத்திரத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கணவர்.!

Published : Nov 02, 2023, 11:06 AM IST

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை ஓட ஓட விரட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
13
நடத்தையில் தீராத சந்தேகம்.. எந்நேரமும் ஓயாத சண்டை.. ஆத்திரத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கணவர்.!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள ஆறாம்பண்ணை பகுதியை சேர்ந்வர் ராஜ்குமார்(31). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மீனா(28). இவர்களுக்கு இரண்டு  மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ராஜ்குமாருக்கும், மீனாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. 

23

மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார்  அரிவாளை எடுத்து மனைவி மீனாவை வெட்ட முயன்றார். அப்போது அவரிடம் தப்பித்து ஓடினார். எனினும் ராஜ்குமார் விடாமல் துரத்தி சென்று தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

33

இதனையத்து கணவர் அங்கிருந்து தப்பித்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் மீனாவின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த நான் அரிவாளால் மீனாவை சரமாரியாக வெட்டி கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். 

click me!

Recommended Stories