
கிரிக்கெட் அதன் பவுண்டரிகளை கடந்து உலக அளவில் எல்லைகளை கடந்து செல்வத்தை வாரி வழங்கி வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் சாதாரண மனிதர்களைப் போன்று நடந்த காலம் மாறிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய பெரிய நிதி நிறுவங்களும் விளையாட்டு கலாச்சாரத்தை பயன்படுத்த தொடங்கியதால் என்னவோ கிரிக்கெட் வீரர்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றனர்.
இந்த நிலையில் தான் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமின்றி திருமண வாழ்க்கையில் விசாலமான மைதானத்திலும் அழகான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்த டாப் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் யர் யார் என்று பார்க்கலாம் வாங்க.
விராட் கோலி அனுஷ்கா சர்மா:
கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களில் காதலித்து திருமணம் செய்த கொண்ட பிரபலங்களில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடியும் ஒன்று. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடியை Ideal Couple – சிறந்த ஜோடி என்று சொன்னால் தவறில்லை.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஷாம்பு விளம்பரத்தின் மூலமாக இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துள்ளனர். இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். விராட் கோலி விளையாடும் போட்டிகளில் எல்லாம் அனுஷ்கா சர்மா நேரில் வந்து பார்த்து ரசித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த ஜனவரி 2021ல் இந்த ஜோடிக்கு வாமிகா என்ற மகள் பிறந்தாள். திருமணத்திற்கு முன்பு காதலித்ததை விட திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஜோடிக்கு அகாய் என்ற மகன் பிறந்தார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த ஜோடியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.1300 கோடி என்றால் உஙகளால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.
யுவராஜ் சிங் – ஹசல் கீச்
சண்டிகரில் கடந்த 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்தவர் யுவராஜ் சிங். அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விளையாடியுள்ளார். இதில், எத்தனையோ ஏற்ற இறக்கங்களை பார்த்துள்ளார். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை ஹசல் கீச்சிற்கும், யுவராஜ் சிங்கிற்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு யுவராஜ் சிங் மற்றும் ஹசல் கீச் தம்பதிக்கு 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தைக்கு ஆரா என்று பெயரிட்டுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா – நடாசா ஸ்டான்கோவிச்:
ஹர்திக் பாண்டியாவிற்கும், பாலிவுட் நடிகையான நடாசா ஸ்டோன்கோவிச்சுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் முதலில் குழந்தை பெற்றுக் கொண்டனர். ஜூலை 30 ஆம் தேதி இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் பிறந்தான்.
மகன் பிறந்து 7 மாதம் கழித்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். உதய்பூரில் வைத்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா திருமணம் நடந்துள்ளது. அப்போது நாட்டையே அச்சுறுத்தி வந்த கொரோனா காரணமாக லாக்வுடன் போடப்பட்டிருந்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு மறுபடியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் இவர்களது திருமண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உதய்பூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில், மெஹந்தி, சங்கீதா நிகழ்ச்சியும், ஹல்தி எனப்படும் மஞ்சள் பூசும் விழாவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎல் ராகுல் – அதியா ஷெட்டி:
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி இருவீட்டாரது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
அதியா ஷெட்டி வேறு யாருமில்லை, அவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். இவர்களது திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து நடைபெற்றது.
ஹர்பஜன் சிங் – கீதா பஸ்ரா:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்த நிலையில் தான் பாலிவுட் நடிகையாக கீதா பஸ்ரா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்டூவர்ட் பின்னி – மாயந்தி லங்கர்:
கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஸ்டூவர்ட் பின்னி, கடந்த 2014 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியின் மூலமாக பிரபலமானார். பேட்டிங் ஆல் ரவுண்டரான பின்னி 4.4 ஓவர்களில் 4 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்டூவர்ட் பின்னி மற்றும் மாயந்தி லங்கர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கிரிக்கெட் வர்ணனையாளரான லங்கர் தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். இந்த நிலையில் தான் இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அனிருத் ஸ்ரீகாந்த் – ஆர்த்தி வெங்கடேஷ்:
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் அனிருத் ஸ்ரீகாந்த். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியிருக்கிறார். தமிழ்நாடு கிரிக்கெட் லீக் தொடரிலும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். எனினும், இந்திய அணியில் இடம் பெறவில்லை.