இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்னென்ன கார் இருக்கு?

Published : Jul 10, 2024, 09:41 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் காம்பீரின் நிகர சொத்து மதிப்பு தோராயமாக ரூ.265 கோடி ஆகும்.

PREV
110
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு எவ்வளவு? என்னென்ன கார் இருக்கு?
Gautam Gambhir Net Worth

டெல்லியில் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி பிறந்தவர் கவுதம் காம்பீர். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். பல போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். கிரிக்கெட்டில் இவரது சாதனைகள் ஏராளம். 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கவுதம் காம்பீர் 4,154 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 9 சதங்களும், 22 அரைசதங்களும் அடங்கும்.

210
Indian Team New Head Coach

இதே போன்று, 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய காம்பீர் 5,238 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 11 சதங்களும், 34 அரைசதங்களும் அடங்கும். 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள காம்பீர் 7 அரைசதங்கள் உள்பட 932 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

310
Gautam Gambhir Net Worth

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் காம்பீர் 54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 75 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

410
Gautam Gambhir Indian Cricket Team

இதே போன்று தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்றதில் காம்பீரும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இலங்கைக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 3ஆவது வரிசையில் களமிறங்கிய காம்பீர் 122 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 97 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

510
Gautam Gambhir, Indian Cricket Team

தோனி 91 ரன்கள் எடுத்துக் கொடுத்து அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார். காம்பீரது கிரிக்கெட் பயணம் சிறப்பானதாக இருந்தது. அதிலேயும், வீரேந்திர சேவாக்குடன் இணைந்து உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற காம்பீர் அரசியலிலும் கால் பதித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அதன் பிறகு ஐபிஎல் 2024 தொடருக்காக அரசியலிலிருந்து விலகினார்.

610
Indian Cricket Team Head Coach Gautam Gambhir Net Worth

இந்த நிலையில் தான் என்பிடி அறிக்கையின்படி, உலக அளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அறியப்படும் கவுதம் கம்பீரின் நிகர சொத்து மதிப்பு ரூ. 265 கோடி (டாலர் 32 மில்லியன்) ஆகும். கிரிக்கெட் மட்டுமின்றி, பிராண்ட் ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் பல்வேறு பிஸினஸ் ஆகியவற்றின் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார்.

710
Gautam Gambhir

ஆடை வணிகங்கள், உணவகங்கள் மற்றும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார், பல ஆண்டுகளாக தனது வருமானத்தை கணிசமாக உயர்த்தி வந்த நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டின்படி காம்பீரது நிகர சொத்து மதிப்பு ரூ.265 கோடியாக உள்ளது.

810
Gautam Gambhir Net Worth

கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் கூட கிரிக்கெட் வர்ணனையாளராக, கிரிக்கெட் தொடர்பான பிற ஊடக ஈடுபாடுகள் ஆகியவற்றின் மூலமாக ரூ.1.5 கோடி வரையில் சம்பாதித்து வருகிறார். கவுதம் காம்பீர் எம்ஆர்எஃப் மற்றும் ரீபுக் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

910
Gautam Gambhir Net Worth

தற்போது, ​​அவர் பினாக்கிள் ஸ்பெஷாலிட்டி வாகனங்கள் (பிஎஸ்வி) மற்றும் ஃபேன்டஸி கேமிங் தளமான கிரிக்ப்ளே ஆகியவற்றின் பிராண்ட் தூதராக இருக்கிறார். சமீபத்தில், Redcliffe Labsன் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார். டெல்லியில் ரூ.15 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்று உள்ளது. இது தவிர, கிரேட்டர் நொய்டாவின் ஜேபி விஷ் டவுனில் (ரூ. 4 கோடி) ஒரு சொகுசு பங்களாவும், மல்காபூர் கிராமத்தில் உள்ள எச்எம்டிஏவின் லேஅவுட்டில் (ரூ. 1 கோடி மதிப்பு) சொகுசு பங்களாவும் வைத்திருக்கிறார்.

1010
Gautam Gambhir Net Worth

கவுதம் காம்பீ ஆடி Q5 மற்றும் BMW 530D ஆகிய சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அதோடு, மாருதி சுஸுகி SX4, Toyota Corolla, Mahindra Bolero Stinger கார்களும் வைத்திருக்கிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories