தமிழ்ல பேசுவியா? காதை திருகிய ஆசிரியையால் சிறுவனின் காது அறுந்தது..! இறுதியில் நடந்தது என்ன?

First Published | Jan 27, 2024, 11:48 AM IST

சென்னையில் தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்து ஆசிரியை திருகியதால் காது அறுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

school teacher

சென்னை திருவொற்றியூர் ஜென்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த கேசவன். இவரது மகன் மனிஷ்(10). இவர் ராயபுரத்தில் உள்ள மான்போர்டு நர்சரி பிரைமரி தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி பள்ளி வகுப்பறையில் தமிழில் பேசியதால் பள்ளி ஆசிரியர் நாயகி அவரது காதை பிடித்துக் திருகியுள்ளார். 

School Student

இதனால், மாணவனின் காது சதை கிழிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவனை மருத்துவரிடம் அழைத்து சென்ற போது அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உடனடியாக மகன் மனிஷ் மித்ரனை சென்னை தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்து காது ஒட்டப்பட்டது. 

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. திடீர் மாரடைப்பு.. இளம் சிஆர்பிஎப் வீரர் துடிதுடித்து உயிரிழப்பு..!

Tap to resize

Student Attacked

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தயார் ஆசிரியரை நாயகி மீது ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே மாணவனின் தாயார் தாக்கியதாக கூறி ஆசிரியை நாயகி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos

click me!