தமிழக அரசு வெளியிட்டுள்ள குட்நியூஸ்.. 5,852 குடும்பங்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணம்..!

Published : Dec 14, 2023, 07:14 AM ISTUpdated : Dec 14, 2023, 07:25 AM IST

எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 5,852 குடும்பங்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது. 

PREV
15
தமிழக அரசு வெளியிட்டுள்ள குட்நியூஸ்.. 5,852 குடும்பங்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணம்..!

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூழ்கிய நிலையில், வட சென்னை பகுதியில் மழைநீருடன் கச்சா எண்ணை கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. மேலும் எண்ணை படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்தால் வீடுகள் முழுவதும் எண்ணெய் படலமாக காட்சி அளிக்கிறது. 

25

மேலும் கடலில் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் கலந்துள்ளதாக கடலோர காவல்படை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதனையடுத்து கடலில் பரவி உள்ள எண்ணை கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் (ஓ.எஸ்.டி) என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர். உடனடியாக இழப்பீடு வழங்கவும், எண்ணெய் கழிவுகளை அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

35

இதனையடுத்து தேவையான ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 75 படகுகள் மூலம் கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெட்டுக்குப்பத்தில் கொசஸ்லை ஆற்றில் படிந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணியில் மீனவர்கள் உதவியுடன் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

45

இந்நிலையில், எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 5,852 குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க சென்னை மாநகராட்சி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 உடன் கூடுதல் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

55

எண்ணெய் கசிவுக்கு காரணமான சிபிசிஎல் நிறுவனத்திடம் தொகையைப் பெற்று அதனை பாதிக்கப்பட்ட 5,852 குடும்பங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories