கல் உப்பு தீபம்: ஆற்றலை நாம் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு இந்த தீபம் சக்தி வாய்ந்தது. மேலும் வீட்டில் இந்த தீபம் ஏற்றினால், வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும் என்பது நம்பிக்கை. முக்கியமாக, பௌர்ணமி நாட்களில் உப்பு தீபம் ஏற்றினால், தொழில் தடை, வருமான தடை, பதிவு கிடைப்பதில் இருக்கும் தடைகள் என இதுபோன்ற தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, நீங்கள் நினைத்த வேலை நினைத்த படியே கிடைக்கும். குறிப்பாக, இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால், 48 நாட்களுக்குள் நீங்கள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. நீங்கள் தீபம் ஏற்றும் போது, விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை கிழக்கு திசை பார்த்து ஏற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D