Actor Sivakarthikeyan
சின்னத்திரையில் இருந்து வருபவர்கள் சினிமாவில் சாதிக்க முடியாது என்கிற பிம்பத்தை தகர்த்தெறிந்தவர் தான் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தொடங்கிய இவரது பயணம், பின்னர் தொகுப்பாளராக வெகுஜன மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து இவருக்கு சினிமா நிகழ்ச்சிகள், விருது விழாக்களை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அதனை அரிய வாய்ப்பாக பயன்படுத்தி தன்னுடையை திறமையை நிரூபித்து சினிமாவுக்குள் நுழைந்தார்.
Dhanush, sivakarthikeyan
சிவகார்த்திகேயனை சினிமாவுக்குள் கொண்டு வந்தது தனுஷ். அவர் தனது 3 படத்தில் சிவகார்த்திகேயனை காமெடியனாக நடிக்க வைத்தார். அப்படத்துக்கு பின்னர் அவரை இயக்குனர் பாண்டிராஜ் ஹீரோவாக்கினார். மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு, தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றி அவரின் கெரியரை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றது.
sivakarthikeyan
பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என கிராமத்து கதையம்சம் கொண்ட படங்கள் மூலம் பி மற்றும் சி செண்டர் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார் சிவா. இதன்பின்னர் ஆக்ஷன் மோடுக்கு மாறிய அவர் காக்கிசட்டை, ரெமோ, சீமராஜா போன்ற படங்களில் நடித்தார். படத்துக்கு படம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இவரை அடுத்த சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டார் சிவா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
sivakarthikeyan salary
100 கோடி வசூல் என்பது விஷால், சிம்பு போன்ற சீனியர் நடிகர்களுக்கே சவாலாக இருந்த நிலையில், 10 ஆண்டுகளில் அதனை அசால்டாக எட்டிப்பிடித்து சாதனை படைத்தார். டாக்டர் படம் தான் சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி வசூல் படம், இதையடுத்து டான் படத்திலும் அந்த வசூல் சாதனையை நிகழ்த்திக்காட்டி இருந்தார் சிவகார்த்திகேயன். இவர்கைவசம் தற்போது அயலான் படம் உள்ளது. இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
Sivakarthikeyan Net worth
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி 11 ஆண்டுகளில் சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு சொந்தமாக ரூ.110 கோடி சொத்து உள்ளதாம். அவர் ஒரு படத்துக்கு ரூ.35 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதுமட்டுமின்றி எஸ்.கே.புரடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன்மூலம் கனா, டாக்டர், யாழ் போன்ற தரமான படங்களை தயாரித்து வெற்றிகண்டுள்ளார் சிவா.
Sivakarthikeyan family
இதுதவிர சிவகார்த்திகேயனிடம் பல்வேறு சொகுசு கார்களும் உள்ளன. மேலும் இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியில் ஆடம்பர பங்களாவும் உள்ளது. இதோடு தனது பூர்வீக கிராமத்திலும் ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றை அண்மையில் கட்டி அதற்கு கிரஹப்பிரவேசமும் நடத்தி அழகுபார்த்தார் சிவா. இவர் சினிமாவில் நடிக்க வரும் முன்பே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆராதனா என்கிற பெண் குழந்தையும், குகன் தாஸ் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.
இதையும் படியுங்கள்... நிக்சனின் லீலைகளை கண்டுகொள்ளாத கமல்... சுட்டிக்காட்டி சுளுக்கெடுத்த நாகார்ஜுனா - மரண மாஸ் வீடியோ இதோ