தீயாய் பரவிய ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ... பதறிப்போன பாலிவுட் - நடிகைகளுக்கு தலைவலியாக மாறிய Deep Fake

First Published | Nov 27, 2023, 10:48 AM IST

நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப்-ஐ தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் டீப் பேக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

Alia Bhatt

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது சினிமா பிரபலங்களுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. இதனைப்பயன்படுத்தி எந்த ஒரு வீடியோவையும் ஈஸியாக மார்பிங் செய்ய முடியும். அதுவும் தத்ரூபமாக இருப்பதால் அது உண்மை என நம்பி பலரும் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாக ஏராளமான டீப் ஃபேக் வீடியோக்கள் உலா வரத் தொடங்கி உள்ளன.

Katrina Kaif, Rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வைரலான போது தான் திரையுலகமே ஒன்றுகூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இதனை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு, டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கைக்கு பின்பும் டீப் ஃபேக் வீடியோக்கள் உலாவுவது குறைந்தபாடில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Katrina Kaif, Rashmika Deep Fake

ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்த காட்சியை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர். இப்படி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாவது தொடர்கதையாக உள்ள நிலையில், தற்போது புதிதாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

alia bhatt Deep Fake

அந்த வீடியோவில் நடிகை ஆலியா பட் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது டீப் ஃபேக் வீடியோ என தெரியாமல் சிலர் உண்மை என நினைத்து பகிரத்தொடங்கியதால், இந்த வீடியோ வைரலானது. இப்படி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் தொடர்ந்து பரவி வருவதால் அது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்கள்... உங்கள் பேச்சுத்திமிர் வக்கிரமாக உள்ளது ஞானவேல்ராஜா - அமீரை கொச்சைப்படுத்தியதால் கொந்தளித்த பருத்திவீரன் நடிகர்

Latest Videos

click me!