தீவிர ரசிகையின் பெயரை மகளுக்கு சூட்டி அழகுபார்த்த ரகுமான் - காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!

Published : Oct 15, 2023, 10:57 AM IST

நடிகர் ரகுமான் தனது தீவிர ரசிகையை சந்தித்த பின்னர் அவரின் பெயரையே தனது மகளுக்கு வைத்துள்ள சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
தீவிர ரசிகையின் பெயரை மகளுக்கு சூட்டி அழகுபார்த்த ரகுமான் - காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!
Actor Rahman

கே.பாலச்சந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் படம் மூலம் கடந்த 1989-ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானவர் ரகுமான். 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த ரகுமான், தமிழ் மட்டுமின்றி பிறமொழிகளில் நடித்திருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கலக்கி வரும் ரகுமான், கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திங்கள் என பிசியாக நடித்து வருகிறார் ரகுமான்.

25
Actor Rahman wife

நடிகர் ரகுமானுக்கு கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் மெஹ்ருனிஷா ரகுமான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ரகுமானின் மனைவி, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சைரா பாணுவின் உடன்பிறந்த தங்கை ஆவார். ஒரு நிகழ்ச்சியில் மெஹ்ருனிஷாவை பார்த்தபோது இவரைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்த ரகுமான், அதன்படியே அவரை கரம்பிடித்து இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

35
Actor Rahman daughters

இதனைப் பேட்டி ஒன்றி பகிர்ந்துகொண்ட ரகுமான், தன்னுடைய தீவிர ரசிகை ஒருவர் குறித்தும் அதில் மனம்திறந்து பேசி இருந்தார். இலங்கையில் ரகுமானின் தீவிர ரசிகை ஒருவர் இருந்துள்ளார். அவருக்கு ரகுமானை தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் நடிகர் ரகுமான் ஷூட்டிங்கிற்காக இலங்கைக்கு சென்றிருக்கிறார். இதை அறிந்த அந்த ரசிகை, தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறி இருக்கிறார்.

45
Actor Rahman about his ardent fan

உடனே அந்த ரசிகையின் பெற்றோரும் ரகுமானை நேரில் சந்தித்து தன் மகளின் ஆசையை பற்றி கூறி இருக்கின்றனர். இதையடுத்து அந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்ற அவரது வீட்டுக்கே ஒரு நாள் இரவு விருந்துக்கு சென்றிருக்கிறார் ரகுமான். அங்கே சென்றதும் ரகுமான் வாயடைத்து போனாராம். அந்த வீட்டில் பாத்ரூமில் இருந்து பெட்ரூம் வரை திரும்பிய பக்கமெல்லாம் ரகுமானின் புகைப்படங்கள் தான் ஒட்டப்பட்டு இருந்ததாம்.

55
Rahman

அதோடு ரகுமானை நேரில் சந்திக்கும் வரை தான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்கிற முடிவில் இருந்த அந்த ரசிகையிடம் திருமணம் செய்துகொள்ள சொல்லி அட்வைஸும் பண்ணினாராம் ரகுமான். தனக்கு இப்படி ஒரு ரசிகையா என வியந்துபோன ரகுமான், அவருக்காக எதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்து தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு அந்த ரசிகையின் பெயரையே வைத்திருக்கிறார். அதேபோல் அந்த ரசிகையும் தனக்கு பிறந்த குழந்தைக்கு ரகுமானின் பெயரை சூட்டினாராம். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை நடிகர் ரகுமானே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... உன் வீட்டு வேலைக்காரனா நானு? மட்டு மரியாதை இன்றி பேசிய வனிதா மகள் ஜோவிகாவுக்கு செம்ம டோஸ் கொடுத்த விஷ்ணு

click me!

Recommended Stories