சுர்ருன்னு சூடு வைத்த இந்தியன் 2.. உஷாரான "ஆண்டவர்" - "Thug Life" மணிரத்னத்துக்கு போட்ட புது கண்டிஷன்!

First Published | Aug 12, 2024, 4:33 PM IST

Thug Life : இந்தியன் 2 OTTயில் வெளியான மறுநிமிடமே, அந்த படத்தை இன்ச் இன்ச்சாக கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள் என்றே கூறலாம்.

indian 2 shankar

உலக நாயகன் கமலின் நடிப்பும் கூட கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்று நிரூபித்துள்ளது இந்தியன் 2 திரைப்படம். சுஜாதா இல்லாமல், சங்கர் தடுமாறியதால் தான் இந்தியன் 2 திரைப்படம் இவ்வளவு மோசமாக எடுக்கப்பட்டுள்ளது என்று பலரும் கருத்துக்களை முன்வைக்கும் அதே நேரம், கமலின் நடிப்பு கூட நல்ல இல்லையே அது ஏன் என்றும் கேள்வி எழுந்து வருகின்றனர். 

Hanksika : “இதே போல எப்பவும் ஹேப்பியா இருக்கணும் கடவுளே..” ஹன்சிகாவின் பர்த்டே கிளிக்ஸ் இதோ..

Lyca

இந்தியன் 2 படத்தை பொறுத்தவரை, அதை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு, முதலுக்கே மோசமாகியுள்ளது என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு உலக அளவில் பயங்கரமாக அடிவாங்கியுள்ளது அந்த திரைப்படம். ஏற்கனவே பொன்னின் செல்வன், சந்திரமுகி 2 மற்றும் லால் சலாம் என்று பல உள்காயங்களுடன் லைகா பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.      

Tap to resize

Bigg Boss

இந்த சூழலில் சூடுபட்ட சிங்கம் போல தனது அடுத்த நகர்வுகளை மிகவும் கனகச்சிதமாக நகர்த்தி வருகின்றார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலக்கியது கூட, தனது படங்களில் அதிக கவனத்துடன் செயல்பட தான் என்று ஒரு பேச்சும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் Thug Life படத்திற்கும் புதிய கண்டிஷன் ஒன்று போட்டுள்ளாராம்.

Kamal

"நாயகன்" படத்துக்கு பிறகு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல் நடித்து வரும் படம் தான் Thug Life. கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டே Thug Life படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் எதிலும் இனி அவசரம் வேண்டாம், படத்தை அடுத்த ஆண்டு கூட வெளியிடலாம், எல்லா வேலைகளும் நிறுத்தி நிதானமாகவே செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார் கமல் என்று கூறப்படுகிறது. Thug Life படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அம்மா நயன் அரவணைப்பில் சிக்கிய உயிர் - உலகம்! வேலைக்கு செல்வதற்கு முன்.. அழகிய தருணத்தின் புகைப்படங்கள்!

Latest Videos

click me!