தரமான சவுண்டு... தாறுமாறான வைப்ஸ்... 2024 இல் டாப் 5 ப்ரீமியம் ஹெட்ஃபோன்ஸ்!

First Published | Dec 11, 2024, 12:28 AM IST

2024 Top 5 premium headphones: 2024ஆம் ஆண்டு இந்தியாவில் பல குறிப்பிடத்தக்க ஹெட்ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சோனி, சென்ஹைசர், சோனோஸ், பீட்ஸ் போன்ற பிரபல பிராண்டுகள் பிரீமியம் ஹெட்ஃபோன்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அவற்றில் டாப் 5 ஹெட்ஃபோன்களை இத்தொகுப்பில் காணலாம்.

Top 5 premium headphones 2024

2024ஆம் ஆண்டு இந்தியாவில் பல குறிப்பிடத்தக்க ஹெட்ஃபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சோனி, சென்ஹைசர் போன்ற பிரபல பிராண்டுகள் புதிய மாடல்களைக் கொண்டுவந்துள்ளன. அதே நேரத்தில் சோனோஸ் போன்ற பிரீமியம் பிராண்டுகளிலும் புதுவரவுகள் உள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் பீட்ஸ் இந்தியாவில் பீட்ஸ் சோலோ மற்றும் ஸ்டுடியோ ப்ரோ ஹெட்ஃபோன்களை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் தொகுப்பில் 2024ஆம் ஆண்டின் ஆண்டின் சில சிறந்த ஹெட்ஃபோன்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

Sony ULT Wear

ULT Wear ஹெட்ஃபோன்கள் அணிவதற்கு ஒரு வசதியாக உள்ளது. ஆனால் இவை படுத்திருக்கும் போது பயன்படுத்த அவ்வளவு இணைக்கமாக இருக்காது. ஒலி தரம் சிறப்பாக செயல்படுகிறது. நீண்ட பேட்டரி ஆயுள், விரைவான சார்ஜிங் மற்றும் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) போன்ற அடிப்படை அம்சங்கள் உள்ளன. இதன் விலைரூ 16,500

Tap to resize

Sennheiser Accentum Plus

சென்ஹைசர் ஆக்ஸெண்டம் பிளஸ் ஹெட்ஃபோன்கள், வசதியாகவும் பல மேம்பட்ட அம்சங்களுடனும் கிடைக்கின்றன. தெளிவான ஆடியோ தரம், நீண்ட கால பேட்டரி ஆயுள் ஆகியவற்றுடன் வயர் இணைப்பு ஆப்ஷனும் இருக்கும் வயர்லெஸ் ஹெட்ஃபோன் இது. இதன் விலை ரூ. 15,990.

Beats Studio Pro

பீட்ஸ் ஸ்டுடியோ ப்ரோ ஹெட்ஃபோன்கள் கவர்ச்சிகரமான பேட்டரி ஆயுள், சீரான ஆடியோ, USB-C போர்ட், 3.5mm ஜாக் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஆப்பிள் சாதனங்களுடன் நன்றாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் போன்ற அம்சங்களையும் பெற்றுள்ளது. இதன் விலை ரூ 37,900.

Sonos Ace

பிரீமியம் ஆடியோ தயாரிப்புகளுக்கான சந்தையில் சோனோஸ் ஏஸ் ஹெட்ஃபோன்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்பேஷியல் ஆடியோவிற்கான டால்பி ஹெட் டிராக்கிங், இரச்சல் இல்லாத ஒலியைக் கொடுக்கும் ANC அம்சம் ஆகியவை உள்ளன. நீண்ட பேட்டரி ஆயுளும் உள்ளது. இதன் விலை ரூ 39,999.

Beats Solo 4

.பீட்ஸ் சோலோ 4 ஆன்-இயர் ஹெட்ஃபோன்களில் ANC அம்சம் இல்லை என்பதால், சற்று விலை உயர்ந்ததாகத் தோன்றலாம். ஆனால், குறைந்த லேட்டன்சி கேமிங்கிற்கான வயர் இணைப்பு, சிறந்த வாய்ஸ் கால் செயல்திறன், நீடித்து நிற்கும் பேட்டரி ஆயுள் போன்ற அம்சங்களில் சிறந்து விளங்குகிறது. இதன் விலை ரூ 22,900.

Latest Videos

click me!