FIFA உலகக்கோப்பையில் நார்வேயிடம் பிரேசில் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் நெய்மர் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிரேசில் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்த அணியின் சூப்பர் ஸ்டார் வீரரான நெய்மர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். FIFA உலகக்கோப்பை ப்ரீ-குவார்ட்டர் ஃபைனலில் நார்வே அணியிடம் பிரேசில் தோற்ற உடனேயே, 34 வயதான நெய்மர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். பிரேசில் ஆண்கள் கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையுடன்தான் நெய்மர் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறார்.
24
நெய்மர் ஓய்வு
மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி 80 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம், பீலே போன்ற ஜாம்பவான்களுக்கு இணையாக பிரேசில் கால்பந்து வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். 2010-ல், தனது 18 வயதில் தேசிய அணிக்காக அறிமுகமான நெய்மர், கடந்த 15 ஆண்டுகளாக பிரேசில் அணியின் தாக்குதல் ஆட்டத்தின் முக்கிய வீரராக இருந்தார். நான்கு உலகக்கோப்பைகளில் பிரேசில் ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ள இவர், அணிக்காக பல முக்கியமான தருணங்களில் பக்கபலமாக இருந்துள்ளார்.
நாட்டுக்காக ஒரு பெரிய கனவையும் நெய்மர் நனவாக்கினார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த அவர், 2016-ல் தனது சொந்த மண்ணில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் பிரேசில் அணிக்கு தங்கப் பதக்கம் வென்று தருவதில் முக்கியப் பங்காற்றினார்.
34
கடைசி உலகக்கோப்பையில் நெய்மர்
2026 FIFA உலகக்கோப்பையில் நெய்மரால் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. காயம் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மத்தியிலும், குரூப் சுற்றில் ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில் மாற்று வீரராக களமிறங்கினார். ப்ரீ-குவார்ட்டரில் நார்வேக்கு எதிரான போட்டியின் கடைசி நேரத்தில் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார். இதுவே பிரேசில் அணிக்காக அவர் அடித்த கடைசி கோலாக அமைந்தது. இந்த ஓய்வு, ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. மஞ்சள் ஜெர்சியில் நெய்மர் செய்த மேஜிக், ரசிகர்களின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
பிரேசிலை வீழ்த்திய நார்வே அணி, குவார்ட்டர் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ஜூலை 11 அன்று மியாமி ஸ்டேடியத்தில் நடக்கும் காலிறுதிப் போட்டியில், மெக்சிகோ மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் வெற்றியாளரை நார்வே எதிர்கொள்ளும். 5 முறை கால்பந்து உலகக்கோப்பையை வென்றிருக்கும் பிரேசில், இந்த உலகக்கோப்பையில் காலிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.