நடிகை மலைக்கா அரோரா டீப் நெக் உடையில் காணப்பட்டார். அதுமட்டுமின்றி, அவர் தனது உடையை முடியால் மீண்டும் மீண்டும் மறைக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகையும், நடனக் கலைஞருமான மலைக்கா அரோரா சமீபத்தில் கல்ஃப் ஐடல் 2025 நிகழ்ச்சியில் பங்கேற்றார். டாக்டர் பூ அப்துல்லா இளம் வெற்றியாளர்களை கவுரவித்தார். மலைக்காவிற்கும் பாராட்டு விருது வழங்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியின் போது மலைக்கா அணிந்திருந்த உடை சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
25
கல்ஃப் ஐடல் 2025
கல்ஃப் ஐடல் 2025 மேடையில் மலைக்கா ஸ்டைலாக காணப்பட்டாலும், அவரது டீப்-கட் உடை விவாதப் பொருளானது. நிகழ்ச்சியின் போது, அவர் தனது முடியால் ஆடையை மறைக்க முயன்றது, அவர் சங்கடமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில், மேடையில் இருந்த ஷேக் ஒருவர் மலைக்காவின் சங்கடத்தை கவனித்து, அவருக்கு சால்வை போர்த்தியதாகக் கூறப்படுகிறது.
35
ட்ரோல் செய்யப்படும் மலைக்கா
ஷேக்கின் இந்த செயல் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வீடியோ வைரலானதும், நெட்டிசன்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், "சங்கடமாக உணரும் ஆடையை ஏன் அணிய வேண்டும்?" என்று கேட்கின்றனர். சில ரசிகர்கள் இது அவரது தனிப்பட்ட விருப்பம் என மலைக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நடிகை மலைக்கா அரோரா பாலிவுட்டில் கிளாமர் குயினாக வலம் வருகிறார். 50 வயதை எட்டியும் அவரின் அழகு குறையாமல் இளம் நடிகை போலவே இருப்பதால் அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறையாமல் இருக்கின்றன.
55
மணிரத்னம் பட நடிகை
நடிகை மலைக்கா அரோரா, மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான தைய்யா தையா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.