கடந்த மார்ச் 1ம் தேதி சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 10-ம் வகுப்பு படிக்கும் போது நிஷாந்த் என்பவருடன் நட்பு ஏற்பட்டு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கல்லூரியில் சேர்ந்த பிறகும் இவர்களின் காதல் தொடர்ந்தது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். தன்னிடம் இருந்து ரூ. 68 லட்சத்தை அந்த பெண்ணிடம் பெற்றுக்கொண்டார். நிஷாந்த் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த நான் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன். ஆனால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி ஏமாற்றி வந்தார்.
இதனிடையே, சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிஇஓ மற்றும் தொழில் அதிபரின் ஒருவரின் மகளுடன் நிஷாந்துக்கு திருமணம் நடைபெற இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தன்னை ஏமாற்றிய நிஷாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு தொழிலதிபர் மகளுடன் நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தினர். இதனையடுத்து, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிஷாந்த் தலைமறைவானார்.
இதனையடுத்து, அவரது நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, காணாமல் போன அன்று நிஷாந்த் தங்களுடன் மது அருந்திவிட்டு நண்பர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினார். அதில், ஏதாவது ஒரு ஏரியில் என் உடல் மிதக்கும் என தெரிவித்துள்ளார். அவரது கார் போரூர் ஏரி கரையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 3 நாட்களாக நிஷாந்த் உடல் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அவரது உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த உடல் நிஷாந்தின் உடல் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.