மாணவிகள் குனியும் போது வளைச்சு வளைச்சு போட்டோ.. வீடியோ.. ஆபாச வாத்தியாரை ரவுண்ட் கட்டிய கிராம மக்கள்..

First Published | Apr 13, 2023, 8:11 AM IST

அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

Porn video

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கீரம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் அப்பள்ளி மாணவிகளை ஆபாசமாக செல்போனில் போட்டோ வீடியோ எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம்  கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

Tap to resize

police

இதனால், எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதால் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா அங்குள்ள அறையில் பூட்டி வைத்து விட்டு  போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆசிரியர் இருந்த அறையை திறக்க முயற்பட்டனர். அவர்களை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர். இதனையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர், மாணவிகளை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்த ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பன்னீர்செல்வத்தின் மனைவி  வாழவந்தி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!