அதுக்கு மறுத்த மருமகள்.. துடிக்க துடிக்க கொன்ற மாமானார்.. நடந்தது என்ன? பகீர் தகவல்..!

First Published | Apr 10, 2023, 11:40 AM IST

நெல்லை  மாவட்டம் இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மகன் தமிழரசன் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தங்கராஜின் மனைவி இறந்துவிட்டதால் 2-வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார். 

நெல்லை  மாவட்டம் இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மகன் தமிழரசன் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தங்கராஜின் மனைவி இறந்துவிட்டதால் 2-வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார். 

marrige

இந்நிலையில் மகன் தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, தான் 2வது திருமணம் செய்து கொள்ளப்போவதால் உன் பெயரில் எழுதிக் கொடுத்த வீட்டை தன் பெயரில் எழுதி  கொடுக்கும் படி தங்கராஜ் கேட்டுள்ளார். இதற்கு தமிழரசன் மற்றும் மருமகள் முத்துமாரி ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தங்கராஜ் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

Tap to resize

மகன் வெளியே சென்ற நேரத்தில் வீட்டுக்கு சென்ற மாமனார் மருமகள் என்று கூட பாராமல்  இரும்பு கம்பியை எடுத்து முத்துமாரி தலையில் சரமாரியாக தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்ப்பதற்குள் மாமனார் அங்கிருந்து தப்பித்து சென்றனர். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது முத்துமாரி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். 

இதனையடுத்து முத்துமாரியை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முத்துமாரி உயிரிழந்தார். இதையடுத்து கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள மாமனார் தங்கராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

police

மருமகளை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மாமனாரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று  கூறி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Latest Videos

click me!