கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(36). இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர், தனது வீட்டில் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும், ரூ.500 கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத செந்தில்குமார் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள அறை ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண் ஒருவர் இருந்தார்.
இதனையடுத்து, அந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வாலிபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் ராஜேஷ்(38) என்பதும் கேரளா மாநிலத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது.