கடந்த 2021ம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜாஸ்மீன் கவுர் காதலுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அப்படி இருந்த போதிலும் காதலன் பேசும் படி ஜாஸ்மீனை தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும், ஜாஸ்மீன் அவருடன் பேச மறுத்துவிட்டார்.