மசாஜ் சென்டர்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வந்த போதிலும் குறையவில்லை.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சில தனியார் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் தொழில் நடைபெற்று வந்துள்ளது. மசாஜ் சென்டர்களுக்கு வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் இளம்பெண்களை வைத்து மயக்கி கல்லா கட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து அப்பகுதியில் இருந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது, அரை குறை ஆடைகளுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்களை மடக்கி பிடித்தனர். மேலும், அங்கிருந்த 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். வாடிக்கையாளர்கள் 14 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 10 பெண்களையும், 18 வாடிக்கையாளர்களும் சிக்கிக்கொண்டனர். ஒரே இரவில் 14 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் வாடிக்கையாளர் 32 பேரிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.