எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!

Published : Jul 22, 2023, 09:56 AM ISTUpdated : Jul 22, 2023, 04:16 PM IST

மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிடாத ஆத்திரத்தில் நண்பனை கொடூர தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!
illegal love

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார்(22). இவரது நண்பர் அரவிந்த் (21). அடிக்கடி அரவிந்த் மனோஜ்குமார் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த மனோஜ்குமார் அரவிந்தை கண்டித்துள்ளார். 

24

ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனிமையில் சந்தித்ததுடன் செல்போனிலும் பேசி வந்தனர். இதை தன் நண்பர்களிடம் கூறி மனோஜ்குமார் புலம்பியுள்ளார். இந்நிலையில், மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 18-ம் தேதி அரவிந்தை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கட்டையால் சரமாரியாக தாக்கினர். 

34
Murder case

இதில் படுகாயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு  செய்த போலீசார் மனோஜ் குமார் மற்றும் அவருடையை நண்பர்கள் ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

44

இதுதொடர்பாக மனோஜ்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவி தொடர்பு வைத்துக்கொண்டு செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் அரவிந்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்தேன். திட்டமிட்ட படியே காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று ஆணி பதித்த கட்டையால் அவரை சரமாரியாக தாக்கிய சிறிது நேரத்தில் அவர் மயங்கியதை அடுத்து அங்கிருந்து தப்பித்தோம் என தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories