55 வயதில் சுலோச்சனா க.காதலனுடன் செய்த வேலை! நேரில் பார்த்த கணவர்! போரூர் டோல்கேட்டில் நடந்த அதிர்ச்சி!

Published : Nov 20, 2025, 11:03 AM IST

சென்னை போரூர் டோல்கேட்டில், கள்ளக்காதலனுடன் வந்த மனைவியை அவரது கணவர் ராஜா சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மனைவி மற்றும் பதிலுக்கு தாக்கப்பட்ட கணவர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

PREV
14

திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சுலோச்சனாவுக்கு, வேதநாயகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

24

இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ராஜாவுக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக ராஜா போரூர் டோல்கேட்டில் மனைவிக்காக காத்திருந்தார். அப்போது மனைவி சுலோச்சனா தனது கள்ளக்காதலனுடன் வந்து இறங்கியுள்ளார்.

34

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கணவர் பொதுமக்கள் மத்தியில் பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெள்ளத்தில் அலறி துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வேதநாயகம் மற்றும் அவரது நண்பர்கள் ராஜாவை சரமாரியாக தாக்கியதில் அவரும் காயமடைந்தார்.

44

பின்னர் கணவன்-மனைவி இருவரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வானகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories