விருதுநகர் மாவட்டம் கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பழனி (27). இவருக்கும் பனைக்குடி பகுதியை சேர்ந்த பாண்டி மகள் முத்துவள்ளி (24) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தையில்லை. இதன் காரணமாக கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நாளடைவில் மனைவி முத்துவள்ளியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்துவள்ளி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இருவீட்டாரின் உறவினர்கள் பழனி, முத்துவள்ளி இருவரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி மீண்டும் கணவருடன் சென்று குடும்பம் நடத்த அனுப்பி வைத்தனர். அப்படி இருந்த போதிலும் இருவருக்கும் இடையேயான பிரச்சனை ஓயவில்லை.
இந்நிலையில், வீட்டில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் முத்துவள்ளியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது நாடியின் கீழ்பகுதி, நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காணப்பட்ட காயங்களால் சந்தேகமடைந்த போலீசார் அவரது கணவர் பழனியிடம் அதிரடியாக விசாரணையை தொடங்கினர். இதில் பழனி தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.