குழந்தை என்னுடைய ஜாடையில் இல்லை! இது வேற யாருக்கோ பிறந்தது! ஆத்திரத்தில் தந்தை என்ன செய்தார் தெரியுமா?

First Published | Jul 12, 2023, 2:03 PM IST

குழந்தை என்னுடைய ஜாடை என கூறி மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவர் ஆத்திரத்தில் குழந்தையின் கழுத்தை தந்தையே அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vellore jail

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹேமலதா(22). இது தலை பிரசவம் என்பதால் 3வது மாதம் முதல் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஹேமலதாவுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது குழந்தையை பார்த்து சந்தோஷம் படாமல் அதிர்ச்சியடைந்து குழந்தை ஜாடை என்னைப் போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Tap to resize

இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் பிளேடால் குழந்தை என்று கூட பாராமல் கழுத்து மற்றும் கையை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பச்சிளம் குழந்தைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த  மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

Latest Videos

click me!