80 வயது கிழவியை தூக்கி சென்று பலாத்காரம்.. அலறியும் விடாமல் கஞ்சா போதையில் இளைஞர் செய்த கொடூரம்.!

Published : Jul 14, 2023, 10:53 AM IST

விழுப்புரம் அருகே 80 வயது மூதாட்டியை கஞ்சா போதையில் இருந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
13
80 வயது கிழவியை தூக்கி சென்று பலாத்காரம்.. அலறியும் விடாமல் கஞ்சா போதையில் இளைஞர் செய்த கொடூரம்.!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை(80). இவர் தனது மூத்த மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இந்நிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக மகள் சென்ற நிலையில் தனியாக மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

23
rape

அப்போது கஞ்சா போதையில் இருந்த எதிர் வீட்டை சேர்ந்த குகன்(21) மூதாட்டையை தூக்கிச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூததாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். 

33

பின்னர் அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் மூத்த மகள் வீரம்மாள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 80 வயது மூதாட்டியைக்  கஞ்சா போதையில் இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!

Recommended Stories