2025ல் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் படங்கள் எது? கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?

Published : Dec 03, 2025, 01:27 PM IST

2025-ம் ஆண்டு முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களில் அதிக வசூலை வாரிக்குவித்த டாப் 10 மூவீஸ் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
111
Top 10 Highest Grossing Tamil Movies in 2025

2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சுமாரான ஆண்டாகவே அமைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு தான் அதிகப்படியான படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதில் வெற்றியடைந்த படங்களைவிட தோல்வி அடைந்த படங்கள் தான் மிக அதிகம். இந்த நிலையில், இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை வாரிக்குவித்து வெற்றிவாகை சூடிய டாப் 10 தமிழ் படங்களைப் பற்றியும், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

211
10. டூரிஸ்ட் ஃபேமிலி

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மே மாதம் திரைக்கு வந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளதுல் வெறும் 7 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.88.1 கோடி வசூலை வாரிக்குவித்திருந்தது.

311
9. ரெட்ரோ

சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் ரெட்ரோ. கங்குவா தோல்விக்கு பின்னர் சூர்யாவுக்கு ஒரு ஆறுதல் வெற்றியை பெற்றுத்தந்த படம் இதுவாகும். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.97.44 கோடி வசூலித்து இருந்தது.

411
8. தக் லைஃப்

2025-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் கமல்ஹாசன் - சிம்பு கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படமும் ஒன்று. இப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். ஜூன் மாதம் ரிலீஸ் ஆன தக் லைஃப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 98.05 கோடி வசூல் செய்திருந்தது.

511
7. தலைவன் தலைவி

பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படம் தலைவன் தலைவி. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்தது.

611
6. மதராஸி

அமரன் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸ் ஆன படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.

711
5. டியூட்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் டியூட். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.116 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.

811
4. விடாமுயற்சி

நான்காவது இடத்தில் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.137.5 கோடி வசூலித்து இருந்தது.

911
3. டிராகன்

அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.152 கோடி வசூலித்து இருந்தது.

1011
2. குட் பேட் அக்லி

கோலிவுட்டில் அதிக வசூலை வாரிசுருட்டிய படங்கள் லிஸ்ட்டில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.248 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.

1111
1. கூலி

உலகளவில் ரூ.516.02 கோடி வசூலித்துள்ள கூலி திரைப்படம் தான் 2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த கோலிவுட் படமாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதன்மூலம் இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக ரஜினிகாந்த் மாறி இருக்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories