'KGF 2' வந்து நாலு வருஷத்துக்கு அப்புறம், 'டாக்ஸிக்' படத்தோட வர்றார் யஷ். ஆகஸ்ட் 26-ம் தேதி ரிலீஸ் ஆகப்போற இந்த படத்தோட முதல் விமர்சனம் இப்போ வெளியாகி இருக்கு.
இந்த படம் சென்சார் முடிஞ்சு 'A' சர்டிபிகேட் வாங்கியிருக்கு. அதாவது, 18 வயசுக்கு மேல உள்ளவங்கதான் பார்க்கணும். அதிகப்படியான ரொமான்ஸ், ஆக்ஷன், வன்முறை, மது, புகைப்பிடித்தல் காட்சிகள் இருக்கிறதால 'A' சர்டிபிகேட் கொடுத்திருக்காங்கன்னு சொல்லப்படுது. படத்தோட நீளம் 3 மணி நேரம் 14 நிமிஷம். படத்தை ஏற்கெனவே சில விமர்சகர்கள், விநியோகஸ்தர்கள் பார்த்துட்டாங்க. அவங்க சொல்ற ரிப்போர்ட்டை வெச்சு படம் எப்படி இருக்குன்னு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு.
25
கோவா மாஃபியா... இதுதான் கதைக்களம்!
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சாலும், கோவா அப்போவும் போர்ச்சுகீசியர்கள் கட்டுப்பாட்டுலதான் இருந்துச்சு. நம்ம ஹைதராபாத் நிஜாம் கட்டுப்பாட்டுல இருந்த மாதிரி. அந்த நேரத்துல கோவால சட்டவிரோத செயல்கள், மாஃபியா ஆதிக்கம் அதிகமா இருந்துச்சு. போதைப்பொருள் கடத்தல், அதிகாரப் போட்டி, துரோகம், பவர் பாலிடிக்ஸ்னு ஒரே ரத்த களறியா இருக்கு. இந்த உலகத்துல ராய் (யஷ்) எப்படி தனக்கான இடத்தை பிடிக்கிறான், எப்படி வளர்கிறான் என்பதுதான் கதை. இதுல யஷ்ஷோட தங்கச்சி கங்கா கதாபாத்திரத்துல நயன்தாரா நடிக்கிறாங்க. காதலி நதியாவா கியாரா அத்வானி வர்றாங்க. ஆனா, சொந்த தங்கையே அண்ணனைக் கொல்ல சதி செய்றாங்களாம். அதுக்கு காரணம் என்னங்கிறது சஸ்பென்ஸ். படத்தோட இன்னொரு ஹைலைட், யஷ் இதுல ராய், ரூமின்னு ரெண்டு கேரக்டர்ல வர்றார். அதுவும் மூணு வித்தியாசமான கெட்டப்ல.
35
யஷ் நடிப்பு... படத்தின் ஹைலைட்ஸ்!
படத்தைப் பத்தி ரெண்டு விதமான கருத்துகள் வருது. யஷ் ரெண்டு கேரக்டர்லயும் பின்னிப் பெடலெடுத்திருக்காராம். அவரோட கரியர் பெஸ்ட் நடிப்பை இதுல பார்க்கலாம்னு சொல்றாங்க. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறதால, ரொம்ப ஆழமா இருக்குமாம். அதனால படத்தோட ஒன்றிப் பார்த்தாதான் புரியும்னு சொல்றாங்க. யஷ் - கியாரா அத்வானி இடையே ரொமான்டிக் காட்சிகள் ட்ரீட்டா இருக்கும்னு பேச்சு. நதியா கேரக்டர்ல கியாரா மிரட்டியிருக்காங்களாம். அதே மாதிரி, யஷ் - நயன்தாரா இடையே வர்ற எமோஷனல், சென்டிமென்ட் காட்சிகள் படத்தோட பெரிய ப்ளஸ்ஸா இருக்கும்னு தகவல். ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா கேரக்டர்கள் சர்ப்ரைஸ் கொடுக்கும்னும் சொல்றாங்க.
படத்தோட ஒவ்வொரு ஃபிரேமும் ரொம்ப பிரம்மாண்டமா, கண்ணுக்கு விருந்தா இருக்குமாம். ரவி பஸ்ரூரின் மியூசிக், BGM படத்துக்கு உயிர் கொடுத்திருக்குன்னு சொல்றாங்க. ஆக்ஷன் காட்சிகள் தியேட்டர்ல விசில் பறக்க வைக்கும்னு ஒரு டாக் இருக்கு. டீசர், டிரெய்லர்ல காட்டுன மாதிரி வெறும் ரொமான்ஸ், ஆக்ஷன் மட்டும் இல்லாம, எமோஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்களாம். ராய் ஒரு கிங்கா மாறுறதுக்கான போராட்டம் விறுவிறுப்பா இருக்கும்னும், ராய்-ரூமி வர்ற சண்டையும் மிரட்டலா இருக்கும்னும் விமர்சகர்கள் சொல்றாங்க. பாக்ஸ் ஆபிஸ்ல சுனாமி நிச்சயம், 'KGF 2' வசூலைத் தாண்டும்னு சொல்றாங்க. ஆனா, இதெல்லாம் பெய்டு புரொமோஷன்னு ஒரு பேச்சு கிளம்பியிருக்கு. பாலிவுட் விமர்சகர் கே.ஆர்.கே (KRK) மாதிரி ஆட்களை வெச்சு காசு கொடுத்து பாசிட்டிவா எழுத வைக்கிறாங்கன்னு சொல்றாங்க. பெய்டு விமர்சகர்கள் 4 ஸ்டார் ரேட்டிங் கொடுக்குறாங்கன்னும், ஆனா அவரை இப்போ யாரும் நம்புறதில்லைன்னும் ஒரு கருத்து நிலவுது.
55
டாக்ஸிக்' படம் யஷ் கரியர்-ல ஒரு 'சாஹோ' மாதிரி
ஆனா கே.ஆர்.கே மட்டுமல்ல, உமைர் சந்துவும் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்திருக்கார். 'டாக்ஸிக்' படம் யஷ் கரியர்-ல ஒரு 'சாஹோ' மாதிரின்னு சொல்லியிருக்கார். யஷ், தாரா சுதாரியா ஜோடி நல்லா இருந்தாலும், யஷ்ஷோட டயலாக் டெலிவரி சரியில்லைன்னு சொல்லியிருக்கார். இது ஒரு பி-கிரேடு, செமி-போர்ன் படம்னும், ஸ்டன்ட்ஸ் நல்லா இல்லைன்னும் போஸ்ட் போட்டிருக்கார். கியாராவோட லுக் நல்லா இருந்தாலும், நடிப்பு சுமார்னும், அவங்க ஒரு 'கிரிஞ்ச்'னும் கமென்ட் பண்ணியிருக்கார். இது 'அனிமல்' படத்தோட காப்பி மாதிரி இருக்குன்னும் சொல்லியிருக்கார்.
யஷ் படத்துக்கு கதை, வசனம், இயக்கம், தயாரிப்புன்னு எல்லா பொறுப்பையும் எடுத்துக்கிட்டது படத்துக்கு பெரிய மைனஸ்னு சொல்றார். மொத்தத்துல 'டாக்ஸிக்' ஒரு மோசமான படம்னும் சொல்லி, வெறும் 2 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தது ஷாக் ஆகியிருக்கு. இப்படி 'டாக்ஸிக்' படத்துக்கு பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு விதமான விமர்சனங்களும் வருது. ஆனா, கே.ஆர்.கே, உமைர் சந்து ரெண்டு பேரையும் இப்போ மக்கள் பெருசா நம்புறதில்லை. அதனால, படத்தோட உண்மையான ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சுக்க, ஏசியாநெட் நியூஸ் தமிழ் ஒரிஜினல் விமர்சனத்துக்கு வெயிட் பண்ணுங்க.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.