நள்ளிரவில் வேக, வேகமாக விலை பேசப்பட்ட ‘வலிமை’... பின்னணியில் அஜித்தின் கறார் கன்டிஷன்...!

First Published | Mar 31, 2021, 5:04 PM IST

நள்ளிரவில் அவசர அவசரமாக வலிமை பட வியாபாரம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரில்லை ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்தனர். தல ரசிகர்கள், வலிமை அப்டேட்டிற்காக செய்த அட்டகாசத்தை சொல்லி அடங்காது, பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
Tap to resize

ரசிகர்களின் செயலால் பொறுமை இழந்த தல அஜித், நானும் தயாரிப்பாளரும் இணைந்து அப்டேட்டை வெளியிடும் வரை பொறுமை காக்கும் படியும், பொது இடத்தில் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்ளும் படியும் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு பல நாட்கள் இழுத்தடித்த போனிகபூர், அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவித்து தல ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார்.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்ட அறிவிப்பில் எங்கள் வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் மதுரை கோபுரம் சினிமாஸ் ஆகியோருக்கு கொடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
நள்ளிரவில் அவசர அவசரமாக வலிமை பட வியாபாரம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் வலிமை படத்தை வைத்து போனிகபூர் போட்ட மற்றொரு திட்டம் எனக்கூறப்படுகிறது.
அதாவது கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு இதே கூட்டணியை வைத்து மீண்டும் ஒரு படத்தை தொடங்கலாம் என அஜித் கூறியுள்ளார். இதனால் குஷியான போனிகபூர் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம். ஆனால் அஜித் எப்போதுமே தன்னுடைய சம்பளத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டார் என ஒரு டாக் உண்டு.
எனவே வலிமை படத்தின் பாக்கி சம்பளம், அஜித் கால்ஷீட் கொடுக்க உள்ள அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் பணம் எல்லாமுமாகச் சேர்ந்து தான் வலிமை படத்தின் தமிழக உரிமை நள்ளிரவில் பேசிமுடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!