“அண்ணாத்த” பட ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்குகிறது?... பரபரப்பில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்...!

Published : Jan 09, 2021, 04:06 PM ISTUpdated : Jan 09, 2021, 04:07 PM IST

இந்நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் அண்ணாத்த படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

PREV
16
“அண்ணாத்த” பட ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்குகிறது?... பரபரப்பில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்...!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். 

26

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தும், தேவா என்ற பெயரில் மம்முட்டியும் நடித்திருந்தனர். அதனை நினைவு கூறும் விதமாக இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் மம்முட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

36

கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

46

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஓட்டுமொத்த படக்குழுவும் பயோபபுளுக்குள் இருந்த நிலையில், தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

56

இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும அறிவித்தார்.

66

இந்நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் அண்ணாத்த படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அது முடிந்த பிறகு ஜூன் அல்லது ஜூலையில் ஷூட்டிங்கில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!

Recommended Stories