ஒரே எழுத்தில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக டைட்டில் வைத்து வெளியான தமிழ் படங்கள்... அட இதுல அஜித் படமும் இருக்கா!

Published : Jun 25, 2023, 02:07 PM IST

ரஜினிகாந்தின் தீ முதல் விக்ரம் நடித்த ஐ படம் வரை நச்சுனு ஒரே எழுத்தில் தலைப்பை வைத்து வெளியான தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
19
ஒரே எழுத்தில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக டைட்டில் வைத்து வெளியான தமிழ் படங்கள்... அட இதுல அஜித் படமும் இருக்கா!

சினிமாவை பொறுத்தவரை அது மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதற்கு அதன் தலைப்பும் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான தலைப்பில் ஏராளமான படங்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி தலைப்பில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று ஒரு எழுத்திலெல்லாம் தலைப்பு வைத்து வெளியான படங்களும் உண்டு. அந்த படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

29
நீ

ஜெயலலிதா நடிப்பில் கடந்த 1965-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நீ. டி.ஆர்.ரமண்ணா இயக்கிய இப்படத்தில் ஜெயசங்கருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை ஜெயலலிதா. இதில் நகைச்சுவை நடிகர் நாகேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

39
தீ

ரஜினிகாந்த் நடிப்பில் ஒரே எழுத்தை தலைப்பாக கொண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் தீ. இப்படத்தை ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருந்தார். கடந்த 1981-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து இப்படம் அதேபெயரில் சுந்தர் சி நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

49
ஸ்ரீ

சூர்யா நாயகனாக நடித்து கடந்த 2002-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் ஸ்ரீ. புஷ்பவாசகன் இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருத்திகா நடித்திருந்தார். இவர் அண்மையில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

59
ஜி

லிங்குசாமி இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜி. இப்படம் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் நடிகர் அஜித் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.

69

புரட்சிகரமான படங்களை எடுக்கக்கூடிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் ஜீவாவை வைத்து எடுத்த திரைப்படம் தான் ஈ. இதில் ஜீவா நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் கடந்த 2006-ம் ஆண்டு திரைக்கு வந்தது.

79
பூ

சசி இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சிறு பட்ஜெட் படம் தான் பூ. இதில் ஸ்ரீகாந்த், பார்வதி, ராமு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற சூசூ மாரி பாடல் இன்றளவும் சுட்டிக் குழந்தைகளின் பேவரைட் பாடலாக விளங்கி வருகிறது.

89
கோ

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் கோ. கடந்த 2011-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். மேலும் அஜ்மல், கார்த்திகா, பியா பாஞ்பாய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

99

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் ஐ. இதில் நடிகர் விக்ரம் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடித்திருந்தார். இப்படத்திற்காக நடிகர் விக்ரம் உடல் எடையை கணிசமாக குறைத்து நடித்திருந்தார்.

click me!

Recommended Stories