Arabic Kuthu : மகேஷ் பாபுவின் ‘கலாவதி’ பாடல் சாதனையை 10 மணிநேரத்தில் அடிச்சு தூக்கிய விஜய்யின் ‘அரபிக் குத்து’

First Published | Feb 15, 2022, 6:22 AM IST

மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள சர்காரு வாரிபட்டா என்கிற படத்தில் இடம்பெறும் கலாவதி என்கிற பாடல் ரிலீசாகி ஒரே நாளில் 16 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்திருந்தது.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட் (Beast). விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Tap to resize

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடலின் புரோமோ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்து செய்யும் விதமாக நேற்று, காதலர் தின ஸ்பெஷலாக இப்பாடல் வெளியிடப்பட்டது.

சிவகார்த்திகேயனின் லிரிக்ஸில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இப்பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது.

இதனிடையே, மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள சர்காரு வாரிபட்டா என்கிற படத்தில் இடம்பெறும் கலாவதி (Kalaavathi) என்கிற பாடல் ரிலீசாகி ஒரே நாளில் 16 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த சாதனையை விஜய்யின் அரபிக் குத்து பீட் செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், விஜய்யின் அரபிக் குத்து (Arabic Kuthu) பாடல் அந்த சாதனையை 10 மணிநேரத்தில் முறியடித்து மாஸ் காட்டி உள்ளது. இதன்மூலம் ரிலீசான ஒரே நாளில் அதிக பார்வைகளை பெற்ற லிரிக்கல் வீடியோ என்கிற சாதனையை பீஸ்ட்டின் அரபிக் குத்து பாடல் படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Latest Videos

click me!