கைமாறிய பணம்.. விஜய் - த்ரிஷா விவகாரத்தின் பின்னணியில் இவ்வளவு விஷயமா?

Published : Mar 20, 2026, 02:11 PM IST

விஜய் மற்றும் திரிஷா விவகாரம் தொடர்பாக பேசிய youtubeர்களுக்கு மட்டுமே இதுவரை 100 கோடிக்கு மேல் பணம் கை மாறி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

PREV
14
Vijay Sangeetha Divorce

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் மும்மரமாக அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு பக்கம் களத்தில் இறங்கி அரசியல் கட்சியினர் வேலை செய்தாலும் மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் ஒரு விதமான வேலைப்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம், youtube உள்ளிட்டவற்றில் பிரபலமாக இருக்கும் சில பேரை வைத்து தங்கள் அரசியல் கட்சிகளை மிகவும் பிரபலப்படுத்தி வருகிறார்கள்.

24
Vijay Trisha Krishnan

Youtube தளத்தில் ஒருவர் கணக்கில் எத்தனை சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு பணத்தை கொடுக்கிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு பேசும் சப்ஸ்கிரைப்ர்கள் அரசியல் கட்சியினர் கொடுக்கும் ஸ்கிரிப்டுகளை தாங்களே கண்டுபிடித்தது போல் பேசி கட்சியை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் பணம் கொடுக்கும் கட்சிக்கு அவதூறாக பேசும் கட்சியினரையும் அவர்கள் தாக்கி பேசி வீடியோ வெளியிட்டார் அதற்கு தனித்தொகையும் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

உதாரணமாக இதற்கு தவெக தலைவர் விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து தொடர்பான வழக்கில் இருக்கிறார். அப்படி இருக்கும் சமயத்தில் நடிகை திரிஷாவுடன் சமீபத்தில் திருமண நிகழ்ச்சிகள் கலந்து கொண்டது பெரும் பேசு பொருளாக மாறியது. இதை சாதகமாக சில அரசியல் கட்சியினர் பயன்படுத்தி கொள்வதாக சொல்லப்படுகிறது.

34
Thalapathy Vijay and Trisha Krishnan

ஆம்.. மனைவி இருக்கும் போது எப்படி விஜய் ஒரு நடிகையுடன் விழாவில் கலந்து கொள்ள முடியும்? இதுதான் ஒரு அரசியல் கட்சி தலைவரின் லட்சனமா? குடும்பத்தையே நிர்வாகம் செய்ய முடியாத இவர் எப்படி நாட்டை ஆளுவார்? என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் யூடியூபர்களால் பேசப்படுகிறது. இப்படி செய்தால் சில youtubeர்களுக்கு லட்ச லட்சமாக பணம் கை மாறுவதாக சொல்லப்படுகிறது.

விஜய் மற்றும் திரிஷா விவகாரம் தொடர்பாக பேசிய youtubeர்களுக்கு மட்டுமே இதுவரை 100 கோடிக்கு மேல் பணம் கை மாறி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

44
TVK Leader Vijay

விஜய் - சங்கீதா விவாகரத்து

விஜய்யின் மனைவி சங்கீதா தனது கணவருக்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்ப்பு இருப்பதாகவும் அதனால் தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். இது தொடர்பான விசாரணை வரும் ஏப்ரல் 20ஆம் தேதி நடக்க உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories