Published : Feb 17, 2022, 03:39 PM ISTUpdated : Feb 17, 2022, 04:17 PM IST
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்..இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார்.
28
Vignesh Shivan - Nayanthara
இந்த காதல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது. விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.
38
Vignesh Shivan - Nayanthara
இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். 2022-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
48
Vignesh Shivan - Nayanthara
நடிகை நயன்தாரா, காதலனுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால், வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார்.
58
Vignesh Shivan - Nayanthara
புத்தாண்டை காதலியுடன் ஜோடியாக கொண்டாடிய விக்னேஷ் சிவன், பொங்கல் பண்டிகையை நயன்தாரா, இன்றி தனியாக கொண்டாடி உள்ளார்.
68
Vignesh Shivan - Nayanthara
விக்னேஷ் சிவன் இல்லாமல் நயன்தாரா பொங்கல் கொண்டாடியது பல யூகங்களுக்கு வலி வகுத்தது. உண்மையில் விக்னேஷ் சிவன் சபரி மலை அப்போது சென்றிருந்தார்..
78
Vignesh Shivan - Nayanthara
விக்னேஷ் சிவன்.. நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தாவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார்..இந்த படம் இரு காதலிகளால் நாயகன் படும் பாட்டை சித்தரிப்பது..
88
Vignesh Shivan - Nayanthara
இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்..இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது..