விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.
மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்
அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் சூர்யா தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும், பிக்பாஸ் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.
சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், தற்போது மிதமான மேக்அப் போட்டு... சல்வாரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.