விஜய் கொடுத்த ஆலோசனையை அப்படியே ஃபாலோ பண்ணும் 'வானத்தை போல' சின்ராசு..! என்ன சொன்னார் தெரியுமா!

First Published Jun 3, 2021, 6:52 PM IST

தளபதி விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, தற்போது 'வானத்தை போல' சீரியலில் சின்ராசுவாக கலக்கி கொண்டிருக்கும் தமன் குமார். தளபதி விஜய் தனக்கு கொடுத்த அறிவுரைகளை அப்படியே ஃபாலோ பண்ணுவதாக கூறியுள்ளார்.
 

சினிமாவில் கவனம் செலுத்தும் போது, பெரும்பாலும் நடிகர்கள் சீரியலில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, சின்னத்திரையில் நிலையான இடத்தையும், மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வரும் தமன் குமார். ஒரே நேரத்தில் சின்னத்திரம், வெள்ளித்திரை என இரண்டு குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்து வருகிறார்.
undefined
தற்போது இவர், கண்மணி பாப்பா மற்றும் யாழி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
undefined
திகில் படமாக உருவாகியுள்ள 'கண்மணி பாப்பா' படத்தில் தமன் குமாரின் மகளாக பேபி மானஸ்வி நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்ட நிலையில், கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்த பின்னர் இந்த படத்தின் ட்ரைலர், மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்ரீமணி இயக்கத்தில், ஸ்ரீ சாய் தேவ் இசையில், எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவில் கண்மணி பாப்பா தயாராகி உள்ளது.
undefined
நடிகர் தமன் குமார், ஐடி துறையை சேர்த்தவர். ஆனால் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் வேலையை விட்டு விட்டு, சினிமா நடிப்பு பயிற்சியில் சேர்த்தார். அந்த நேரத்தில் தான், எஸ்.ஏ.சி இயக்கத்தில் உருவாகும் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் ஆடிஷன் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு, ஆடிஷனிலேயே கலக்கிய தமன் குமாரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார் எஸ்.ஏ.சி.
undefined
இந்த படத்தின் சண்டை காட்சியின் போது ஷூட்டிகை பார்க்க வந்த விஜய், தமன் குமார் காலில் அடிபட்டது பார்த்து அக்கறையாக விசாரித்து மட்டும் இன்றி, சண்டை காட்சிகளில் கூறுதல் அக்கறையோடு இருக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்தாராம்.
undefined
அதே போல், 'சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸ் ஆன போது தமன் குமார் நடிப்பை விஜய் வெகுவாக பாராட்டியது மட்டும் இன்றி, ஒரு நடிகராக நிலைநிறுத்திக்கொள்ள, முன்னோக்கி செல்ல என்னவெல்லாம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியதாக, மாறாத புன்னகையோடு... பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் தமன் குமார்.
undefined
click me!