மேலும் இந்த பட்டியலில் 4ம் இடத்தில் இருப்பது பிரபல டோலிவுட் நடிகர் பிரபாஸ் தான். இவரும் பிரபல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் Phantom காரை வைத்திருக்கிறார். இதன் தற்போதைய விலை சுமார் 10 கோடி ரூபாயாகும். பூஜ்ஜியத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட இந்த வண்டிக்கு வெறும் 4.5 வினாடிகளே தேவைப்படும் என்பதுதான் இந்த வண்டியின் சிறப்பம்சம். ஆனால் அவ்வளவு வேகத்தில் இந்த வண்டி பயணித்தாலும், காருக்குள் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஏதோ மிதவையில் மிதப்பது போன்ற சொகுசு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.