கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூன் 5ந் தேதி திரைக்கு வந்தது. அப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் கடந்த ஜூன் 5ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் உலகமெங்கும் சுமார் 2200க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
24
தக் லைஃப் முதல் வார வசூல் நிலவரம்
தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், அப்படம் வசூலிலும் பலத்த அடி வாங்கி உள்ளது. அதன்படி அப்படம் உலகளவில் முதல் வாரத்தில் ரூ.89 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் ரூ.46 கோடியும், உலகளவில் ரூ.43 கோடியும் அடங்கும். இதே நிலை நீடித்தால் இப்படம் ரூ.100 கோடி வசூலை கூட தொட வாய்ப்பில்லை என விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்விப் படமாக தக் லைஃப் மாறவும் வாய்ப்பு உள்ளது.
34
பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம் அடைந்த தக் லைஃப்
'தக் லைஃப்' திரைப்படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. முதல் வார இறுதியில் (வியாழன் முதல் ஞாயிறு வரை) ரூ.40.75 கோடி வசூலித்தது. தமிழ்நாட்டில் ரூ.33 கோடியும், இந்தியாவின் பிற பகுதிகளில் ரூ.7.75 கோடியும் வசூலித்தது. வார நாட்களில் படத்தின் வசூல் கடுமையாக சரிந்தது. திங்களன்று ரூ.2.25 கோடியாகக் குறைந்தது, இது தொடக்க நாளை விட 85% சரிவு. செவ்வாயன்று ரூ.1.75 கோடியும், புதனன்று ரூ.1.25-1.50 கோடியும் வசூலித்தது. இதனால், இந்தியாவில் மொத்த வசூல் ரூ.46 கோடியாக இருக்கும்.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. அப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் ரூ.125 கோடி வசூலித்து இருந்தது. ஆனால் தக் லைஃப் திரைப்படத்திற்கு ஒரு வாரத்தில் ரூ.89 கோடி மட்டுமே வசூல் கிடைத்துள்ளது. இதே நிலை நீடித்தால், இந்தியன் 2-வை விட அதிக இழப்பை சந்தித்த படமாக தக் லைஃப் மாற வாய்ப்புள்ளது. இப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாததால் ரிலீசுக்கு முன்பே ரூ.15 கோடி இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.