தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் இளம் நடிகர், இதுவரை நடித்த மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகும். 100 கோடி வசூல் கிளப் எட்டிய அந்த ஹீரோ யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக உயர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர், தொடர்ந்து வெற்றிகளை குவித்து கவனத்தை ஈர்த்து வருகிறார். இயக்குநராக ஆரம்பித்து, பின்னர் நடிகராக மாறி, தன் திறமையை நிரூபித்த அவர், இதுவரை தேர்ந்தெடுத்த கதைகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.
25
கோலிவுட்டின் புதிய வசூல் மன்னன்
2019ஆம் ஆண்டு ஒரு வெற்றிப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், சில ஆண்டுகளிலேயே கதாநாயகனாக மாறி பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்தார். தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்றதால், 100 சதவீத ஹிட் சாதனையை தக்க வைத்துள்ள இளம் ஹீரோ என்ற பெயரையும் தக்க வைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, பிரதீப் ரங்கநாதன் தான் அது.
35
இயக்குனர் டூ நடிகர் ஆன பிரதீப் ரங்கநாதன்
கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான டியூட் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த ரொமான்டிக் ஆக்ஷன்-காமெடி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரதீப்புடன் மமிதா பைஜூ இணைந்து நடித்திருந்தார்.
சுமார் ரூ.25–35 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ரூ.25 கோடிக்கு கைப்பற்றியது. இதன் மூலம் தயாரிப்பு செலவில் பெரும் பகுதி வெளியீட்டிற்கு முன்பே சம்பாதித்தது. வசூல் ரீதியாகவும் டியூட் பெரும் சாதனை படைத்தது. வெளியான ஆறு நாட்களிலேயே உலகளவில் ரூ.100 கோடி வசூல் கடந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
55
பிரதீப் ரங்கநாதனின் வரவிருக்கும் படங்கள்
இதன் மூலம் ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய மூன்று படங்களையும் ரூ.100 கோடி கிளப்பில் சேர்த்த ஒரே இளம் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் அவர் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் இவரின் அடுத்தடுத்த வெளியீடுகள் மீது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.